அதோ !
அங்கே !
அப்படியே !
வடிக்க முடியா ஓவியமாய்
படிக்க முடியா காவியமாய்
எழுத முடியா கவிதைவரிகளாய்
விளக்க முடியா சித்தாங்கங்களாக
குழம்பிப் போன சமூகச் சிந்தனைகள்
அதோ !
அங்கே !
அப்படியே !
தொடர முடியா பயணமாய்
முடிய முடியா கதையாய்
திரும்ப முடியா நேர்த்தியாய்
புரிய முடியா வலிகளாக
தேய்ந்துபோன மனித உறவுகள்
அதோ !
அங்கே !
அப்படியே !
அளக்க முடியா வேதனையாய்
பகிர முடியா தனிமையாய்
தீர்க்க முடியா தாகமாய்
மறக்க முடியா நினைவலைகளாக
உறைந்துபோன இதய ஆழங்கள்
அதோ !
அங்கே !
அப்படியே !
பிடிக்க முடியா காற்றாய்
கட்ட முடியா நதியாய்
நிறுத்த முடியா நேரமாய்
மீட்க முடியா இளமைகளாக
கரைந்துபோன வாழ்க்கை மாயங்கள்
அதோ !
அங்கே !
அப்படியே !
சொல்ல முடியா உண்மையாய்
கேட்க முடியா அலறலாய்
காண முடியா இருளாய்
தேட முடியா விடைகளாக
சிதைந்துபோன நீதி கனவுகள்
அதோ !
அங்கே !
அப்படியே !
தொட முடியா விண்ணாய்
தாண்ட முடியா கடலாய்
மாற்ற முடியா விதியாய்
உடைக்க முடியா சுவர்களாக
சிறைப்பட்ட சுதந்திர ஆசைகள்
அதோ !
அங்கே !
அப்படியே !
எண்ண முடியா இழப்பாய்
அழ முடியா துயரமாய்
சிரிக்க முடியா சோர்வாய்
எழ முடியா விழுதுகளாக
நொறுங்கிப்போன தலைமுறை நம்பிக்கைகள்
அதோ !
அங்கே !
அப்படியே !
பிரிக்க முடியா நிழலாய்
கொல்ல முடியா கேள்வியாய்
அடக்க முடியா தீயாய்
அணைக்க முடியா வேர்களாக
துடிக்கும் மண்ணின் மௌன ஆவிகள்
சக்தி சக்திதாசன்
