Thursday, June 04, 2026

எனக்குள் நானே மலர்ந்தேனா ?

எனக்குள் நானே மலர்ந்தேனா ?
​என்னை நானே மறந்தேனா ?
​விண்ணில் ஏகிப் பறந்தேனா ?
​மண்ணில் தவழ்ந்து புரண்டேனா ?

​கவிதை உள்ளம் கொள்ளக் கொள்ள
மனதில் முல்லை மெல்ல மெல்ல
மலர்ந்திடும் வேளை கிள்ளக் கிள்ள
மகிழ்ச்சியில் நெஞ்சம் துள்ளத்
துள்ள

​விந்தைகள் ஒவ்வொன்றாய் விரிய
சிந்தையில் தமிழ்த்துளிகள் வழிய
எந்தையின் நாட்டு நினைவுகள்
தெளிய
தீந்தமிழ்க் கவிதைகள் தினமும்
மலர

​பட்டம் பெற்றதோர் வாழ்வும் அல்ல
விட்டம் குறைந்த வாழ்க்கை எல்லை
முட்டம் நினைக்கும் அன்பின்
முல்லை
எட்டம் தான் என் உறவின் எல்லை

​சொல்லிப் புரியும் உண்மை நீதி
சொல்லில் வருவது நெஞ்சின் பாதி
இதயம் திறக்கும் உணர்ச்சிச் சாவி
இதற்கு மேல் வார்த்தைகள் காலி

மனதில் ஓர் நதி ஓடுகின்றதே
மறைகள் அனைத்தும் தேடுகின்றதே
உணர்வின் உச்சி நாடுகின்றதே
உள்ளம் அமைதியில் வீழ்கின்றதே

காலம் கதவைத் தட்டத் தட்ட
கண்ணீர் சுவடுகள் மங்கித் மங்க
ஞாலம் முழுதும் அணைத்துக் கொள்ள
ஞானம் விழிகள் திறக்கத் திறக்க

ஓசையில் ஓர் அர்த்தம் பிறக்க
ஊசலாடும் நினைவுகள் நிறக்க
தேசம் தாண்டி உயிர்கள் இணக்க
தேனாய் தமிழொலி நெஞ்சில் பாயக்க

பார்வை ஓர் புது உலகம் காண
பாசம் எல்லை கடந்தே போக
ஆர்வம் ஆன்மா தீண்டிச் சேர
ஆழ்ந்த சுகத்தில் நான் நான் ஆக

சக்தி சக்திதாசன்