Thursday, June 25, 2026

தன்னலமற்ற அன்பு ஒன்றே

தன்னலமற்ற அன்பு ஒன்றே

​என்னுள் நானே என்னை
எண்ணற்ற வழிகளில் தேடி
என்னைத் திரியாய் ஆக்கி
என்னை ஊற்றி எரித்தேன்

​முன்னை இருந்த நிலைகள்
முற்றாய்ச் செய்தி சொல்ல
பின்னை வாழும் நிலைக்கு
புரிந்த விளக்கம் தனியே

​விண்ணைத் தாண்டி எழுந்த
வண்ணக் கனவுகள் எல்லாம்
மின்னும் மாயை என்றே
பண்ணாய் விளைந்த முதிர்ச்சி

​கண்ணை மறைத்த காலங்கள்
காற்றோடு கரைந்தே போக
மண்ணுள் கலக்கும் நேரம்
மனிதன் காண்பது நிச்சயம்

​சொன்ன வார்த்தைகள் அனைத்தும்
சொல்லிய கருத்து ஒன்றே
நிலைப்பது உலகில் என்றும்
தன்னலமற்ற அன்பு ஒன்றே

தன்னையே தாண்டி நிற்கும்
தாபமின்றி தரும் உள்ளம்
தரிசனமாய் விளங்கும் போது
தனிமை கூட தெய்வம் ஆகும்

உள்ளம் உருகும் நொடியில்
உயிர்கள் எல்லாம் ஒன்றே எனும்
உண்மை விழிக்கும் பொழுது
உலகம் புதிய அர்த்தம் தரும்

காலம் கடந்து சென்றாலும்
காயம் நினைவாய் தங்கினாலும்
கண்ணீர் துளியில் கூட
கருணை மலரும் விதை உள்ளது

பேராசை பிணைக்கும் நூல்கள்
பேரின்பம் மறைக்கும் வேல்கள்
பேரன்பின் ஒளி வந்தால்
பேதங்கள் எல்லாம் கரையும்

பிறவி பயணப் பாதை
பெருகும் அனுபவ மாலை
பிடித்தது விடும் கணத்தில்
பிறக்கும் சுத்தமான அன்பே

சக்தி சக்திதாசன்