துடிக்கின்றது உள்ளம் தோழா
துவள்கின்றது நெஞ்சம் இன்று
அன்பின் வழியை மூடி வைத்து
ஆலயத்தில் என்ன நீ தேடுகிறாய்?
அறிவைத் தீட்டாமல் ஏனோ
ஆயுதம் தீட்டி நிற்கிறாய்?
கருணையை காசுக்கு விற்று
கடவுளைத் தேடி அலைகிறாய்!
நிம்மதியை நீ தொலைத்து
நேரமின்றி ஓடி செல்லும்
ஆசையின் அலைகளிலே
அழிந்தாய் கணங்களை காணாமல்
உழைப்பின் தரம் குறைத்து வைத்து
உயர வேண்டுமென கனவு காண்கிறாய்?
வியர்வையின் முத்து துளியில் தான்
வெற்றியின் பொன் மலரும் அறியாயோ?
“தன்னைப் போல பிறரையும் நேசி”
என்ற தத்துவம் தந்தவர் இயேசு;
தன்னை மட்டும் நேசித்ததால்
தன்னுள் நீயே மூழ்கி போனாய்!
மனசாட்சி மணி ஒலிக்க
மனதினுள் ஓசை எழாததால்
மனிதம் மறந்த பெருமையை
மறந்து நீயே பேசுகின்றாய்!
மாற்றிடு பாதையை இக்கணமே
மனித நேயம் மீண்டும் மலரட்டும்;
தோழா, விழித்திடு இனியேனும்
இதயம் அறிவோடு மலரட்டும் !
