இல்லாத பொருளொன்றில்
இருக்கின்ற உண்மைகள்
இருளின் கருமைக்குள்
இரைக்கின்ற வெளிச்சங்கள்
இன்றைக்குள் நாளையின்
இழக்கின்ற பொழுதுகள்
முடியாத பயணத்துள்
தொடராத கனவுகளோடு
காணாத காட்சிகளின்
கரைந்தோடும் வர்ணங்கள்
கண்டுகொண்ட நிஜங்களுல்
கசக்கின்ற உண்மைகள்
இருப்பதின் நிழல்களில்
இல்லாத நினைவுகள்
இமைப்பின் இடைவெளியில்
இழையோடும் மௌனங்கள்
இயலாத ஆசைகளின்
இரண்டுபடும் மனங்கள்
அறியாத பாதைகளில்
அழியாத தடங்களோடு
அமையாத உலகத்தின்
அலைமோதும் உணர்வுகள்
அணுகாத உண்மையின்
அதிர்கின்ற ஒலிகள்
காணொளி போலிருக்கும்
காலத்தின் துணுக்குகள்
கலைந்துபோகும் நாள்களின்
கரைந்த சுவடுகள்
கைவிடும் நினைவுகளில்
காத்திருக்கும் குரல்கள்
தொடங்காத முடிவுகளின்
தொலைந்த விளக்கங்கள்
தோன்றாத உருவங்களில்
தொலைந்து போகும் நிறங்கள்
தொட்டுப்பார்க்க முடியாத
தொடரும் எதிரொலிகள்
மறைந்த உணர்ச்சிகளில்
மிளிரும் வலிகள்
முடிவற்ற சுழற்சியின்
மூச்சிரைக்கும் பயணங்கள்
முகமில்லா கனவுகளின்
முரணான அர்த்தங்கள்
விளங்காத இரவுகளின்
விடியாத வெளிச்சங்கள்
விலகாத நினைவுகளின்
விரியும் இருள்கள்
விழித்திருக்கும் உள்ளத்தின்
விசித்திர நிழல்கள்
